திருவள்ளூர், திருத்தணியில் வீடுகளில் பூட்டை உடைத்து 62 பவுன், ரூ.45 ஆயிரம் திருட்டு

திருவள்ளூர், திருத்தணியில் வீடுகளில் பூட்டை உடைத்து 62 பவுன், ரூ.45 ஆயிரம் திருட்டு
Updated on
1 min read

திருத்தணி அடுத்த திருவாலங் காடு, சின்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் பாலாஜி(42). கட்டு மான தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென் றார். நேற்று காலை வீடு திரும்பிய போது முன் பக்க கதவு உடைக் கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

திருவாலங்காடு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

32 பவுன் திருட்டு

திருவள்ளூர் அருகே வேப்பம் பட்டு, ரமணா நகரைச் சேர்ந்த வர் ரவீந்திரன்(33). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். குடும்பத்தினர் வெளியூர் சென்றதால் வீட்டில் தனியாக இருந்த ரவீந்திரன், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு பணிக்குச் சென்றார்.

பணி முடிந்து வீடு திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே பீரோவை உடைத்து 32 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in