“நீங்கள் எங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு மகன்” - மருமகனை நெகிழவைத்த எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்

“நீங்கள் எங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு மகன்” - மருமகனை நெகிழவைத்த எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்
Updated on
1 min read

சென்னை: தென் சென்னை தொகுதி திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் தனது மருமகனுக்கு தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து கவனம் ஈர்த்துள்ளது.

தென் சென்னை தொகுதி திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் மகேந்திரன் மகன் கீர்த்தனுக்கும் சென்னை திருவான்மியூரில் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. பல்வேறு கட்சித் தலைவர்கள், தமிழகத்தின் முக்கிய பிரபலங்கள், சினிமா மற்றும் இலக்கியம் தொடர்புடையவர்கள் கலந்துகொண்ட இந்த திருமணம் அப்போது கவனம் ஈர்த்து இருந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், தமிழச்சி தங்கபாண்டியனின் கணவர் தன்னை கைது செய்த கதையை கூறியது வைரலானது.

இதனிடையே, தமிழச்சி தங்கபாண்டியனின் மருமகன் கீர்த்தனுக்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழச்சி வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், "உங்கள் மருமகன் உங்கள் மகளை முன்பை விட மகிழ்ச்சியாக மாற்றும்போதும், நீங்கள் வீழ்ச்சி அடையும் தருணங்களில் உங்களை உற்சாகப்படுத்தும்போதும், புன்னகையுடன் அமர்ந்து உங்கள் கணவரின் பேச்சைக் கேட்கும்போதும், பேரக்குழந்தைகளைப் பார்க்க உங்கள் மகள் இல்லாமல் கூட சாதாரணமாக வரும்போதும், உங்கள் குட்டி இளவரசியை ராணியாக நடத்தும்போதும் அவர் உங்களுக்கும் மகனாகிறார். என் அன்பான கீர்த்தன், நீங்கள் எங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு மகன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் இப்போது செய்து கொண்டிருப்பது போலவே அப்போதும் எங்களின் வாழ்க்கையை அதிக மகிழ்ச்சியுடன் நிரப்புங்கள்" என்று நெகிழ்ந்துள்ளார்.

தமிழச்சியின் மருமகன் கீர்த்தன், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து திமுகவுக்கு மாறி, தற்போது திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக இருக்கும் மகேந்திரன் மகன் ஆவார். இவர் மருத்துவரும்கூட.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in