

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரும் சனிக்கிழமையன்று (ஆக.27) கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவியின் தாயார் செல்வி சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் சனிக்கிழமையன்று (ஆக.27) காலை 10 மணிக்கும் முதல்வர் உடனான இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் இந்த சந்திப்புக்கான நேரத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
முன்னதாக கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணமடைந்த தனது மகளுக்கு நீதி கேட்டு நடைபயணமாக சென்று முதல்வரிடம் மனு அளிக்க இருப்பதாக, மரணமடைந்த மாணவியின் தாயார் செல்வி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவியின் தாயார் மேற்கொள்ளவிருந்த நடைபயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.