கோவையில் ரூ.56 லட்சம் கொள்ளையில் திருச்சி கும்பலுக்கு தொடர்பா?

கோவையில் ரூ.56 லட்சம் கொள்ளையில் திருச்சி கும்பலுக்கு தொடர்பா?
Updated on
1 min read

கோவை பஞ்சு வியாபாரி வீட்டில் வருமானவரித் துறை அதிகாரி கள்போல் நடித்து, ரூ.56 லட்சம் மதிப்பிலான நகை, பணம் உள் ளிட்டவை கொள்ளையடிக்கப் பட்டதில் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீ ஸார் விசாரணை மேற்கொண் டனர்.

கோவை, சிங்காநல்லூர் ராமானுஜ நகர் காமராஜர் சாலையைச் சேர்ந்த பஞ்சு வியாபாரி பஷீர்(53) என்பவரது வீட்டில் கடந்த 6-ம் தேதி வரு மானவரித் துறை அதிகாரி கள்போல் நடித்த 12 பேர், வீட்டில் இருந்த 150 பவுன் நகை, ரூ.40 லட்சம், 6 அலை பேசிகள், வீட்டில் இருந்த 4 கண்காணிப்பு கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளை யடித்துச் சென்றனர். இதை யடுத்து பஷீரையும் காரில் ஏற்றிக்கொண்டு, நீலாம்பூர் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்ற தாகக் கூறப்படுகிறது.

3 தனிப்படைகள்

இது தொடர்பாக மாநகர போலீஸார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை கும்பலில் 12 பேர் சொகுசு கார்களில் வந்துள்ளனர். அதில், 2 பேர் போலீஸார் போல் உடையணிந்து வந்ததும் விசார ணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகி றோம். திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படை யில், அவர்களைப் பற்றி கோவை தனிப்படை போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். ஆனால், ராம்ஜி நகர் கொள்ளையர்கள் வடநாட்டில் மட்டுமே கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவ தாக தெரியவந்தது.

மேலும், அடையாளம் தெரிந்த இருவர் பற்றியும் விசாரிக்கப்பட்டது. அதில், பெரிதாக துப்பு துலங்க வில்லை. இந்நிலையில், அதில் ஒருவர் வடநாட்டுக்காரரைபோல் இருந்ததால், அதுகுறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இவ்வாறு போலீ ஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in