தமிழக அரசு மக்களுக்காக செய்த செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட பாஜக வலியுறுத்தல்

தமிழக அரசு மக்களுக்காக செய்த செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட பாஜக வலியுறுத்தல்
Updated on
1 min read

விருதுநகர்: தமிழக பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர ரெட்டி விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவினர் மீது திமுகவும், காவல்துறையும் பழி வாங்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. பல மாவட்டங்களில் பாஜகவினரை கைதுசெய்து வருகின்றனர்.

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு திமுக அரசு. இதுதான் திராவிட மாடலா? 502 தேர்தல் வாக்குறுதிகளில் சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். திட்டங்களை அறிவித்து வருமானம் ஈட்டும் முயற்சியில்தான் உள்ளனர். தமிழகத்தில் குடும்ப அரசியல்தான் நடக்கிறது. மதுக்கடைகள்தான் இங்கு அதிகம் திறக்கப்படுகின்றன.

நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர் பிரதமர் மோடி. பாதுகாப்புத்துறை பல மடங்கு வலுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு 2 ஆயிரம் கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு மட்டும் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. ஆனால், எந்த அரசு அலுவலகத்திலும் பிரதமர் படம் வைக்கப்படவில்லை. தமிழக அரசு மக்களுக்காக செய்த செலவுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். கொடுத்த வாக்குறுதியில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன, எத்தனை செயல்படுத்தப்படவில்லை என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in