

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களை கட்டாயப்படுத் தவோ, துன்புறுத்தவோ கூடாது என புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை வெளியிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு விபத்து, இடர்பாடுகளில் உள்ளவர்களுக்கு உதவி செய்பவர் களுக்கான பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதற்கேற்றவாறு, தமிழக அரசும் புதிய வழிகாட்டுதல்களை கொண்ட அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் கூறியிருப்ப தாவது:
விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்பவர்களிடம் வேறு எந்த கேள்வியும் கேட்காமல் முக வரியை பெற்றுக் கொண்டு வெளி யில் செல்ல அனுமதிக்க வேண்டும்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கு அரசு தக்க சன்மானம் வழங்க முன்வர வேண்டும். இந்த சன்மானம், இது போன்ற செயல்களில் ஈடுபட மற்ற பொதுமக்களுக்கு ஆர்வமூட்டு வதாக இருக்க வேண்டும்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்கள் எந்த ஒரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கை களுக்கும் பொறுப்பாக மாட்டார்கள்.
விபத்து தொடர்பான விவரங் களை தொலைபேசி மூலம் காவல் நிலையம், விபத்து சிகிச்சை மையத் துக்கு தொடர்பு கொண்டு ஒருவர் தெரிவித்தால், அவரது பெயர் மற்றும் சொந்த விவரங்களை தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்கள் சொந்த விவரம், தொடர்பு விவரங்களை அளிப்பது அவர்களது விருப்பத்தை பொறுத் தது. மருத்துவ துறையினர் வழங்கும் படிவங்களில் பூர்த்தி செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது.
உதவிசெய்பவர்களின் பெயர், சொந்த விவரங்களை தெரிவிக்க கட்டாயப்படுத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு மற்றும் துறைரீதியான நடவடிக்கை சம்பந்தப்பட்ட அலுவலரால் எடுக்கப்படும்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவியவர்கள் தாமாக சாட்சி சொல்ல விரும்பும் போது, காவல் துறை அவரிடம் ஒரு முறை மட்டுமே விசாரிக்கலாம். மாநில அரசு நிலை யான நடவடிக்கை செயல்பாடு களை உருவாக்கி விபத்து இடர் பாடுகளில் உள்ளவர்களுக்கு உதவு பவர்களை துன்புறுத்தாமல் இருக்க உறுதி செய்ய வேண்டும். கட்டாயப் படுத்தவோ துன்புறுத்தவோ கூடாது.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவியவர்கள், காயமடைந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது உற வினராக இல்லாத பட்சத்தில், அவ ரிடம் இருந்து அனுமதி மற்றும் பதிவு செய்வதற்கான செலவினத்தை செலுத்துமாறு தனியார் மற்றும் பொது மருத்துவமனைகள் கேட்கக் கூடாது. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
சாலை விபத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில், மருத்துவர் அக்கறை செலுத்தாவிட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து மருத்துவமனை களின் நுழைவு வாயிலிலும் விபத் தில் சிக்கியவர்களுக்கு உதவியவர் களை, கைது செய்யப்பட மாட் டாது. பாதிக்கப்பட்டவர்கள் சிகிச் சைக்காக வைப்புத்தொகை செலுத்த கோருவதில்லை என்ற அறிவிப்புப்பலகை வைக்க வேண்டும்.
விபத்து இடர்பாடுகளில் சிக்கி யவர்களுக்கு உதவி செய்பவர்கள் விரும்பும் பட்சத்தில், மருத்துவ மனை நிர்வாகம், காயமடைந்த வர்களை மருத்துவமனையில் சேர்த்த நேரம், விபத்து நிகழ்ந்த இடம் மற்றும் நாள் தொடர்பான அறிக்கையை வழங்கலாம். இதற்கு மாநில அரசு நிலையான படிவம் தயாரித்து அனைத்து மருத்துவ மனைகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். இது உதவிசெய்பவர் களை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்.
அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளும் இந்த நடைமுறைகளை உடனடி யாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இந்த விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க தவ றும், விதிமுறைகளை மீறும் பட்சத் தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.