

திண்டுக்கல் மாவட்ட அளவிலான மழைக் கால நோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் வே.லதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் பூங்கோதை, வரதராஜன் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், டெங்கு கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்க மழை நீர் தேங்கக் கூடிய பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும்.
கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு ஏதேனும் இருந்தால் கொசுப்புழு மருந்து தெளிக்கும் பணியை கிராம ஊராட்சி செயலர்கள் துரிதப்படுத்த வேண்டும்.
சுகாதாரம், ஊரக வளர்ச்சிஉட்பட பல்வேறு துறையினர் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.