தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை: அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை: அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

11-ம் வகுப்பு முதல், முதுகலை பட்டம் வரை பயிலும் தொழிலாளர் களின் குழந்தைகளுக்கு புத்தகங் கள் வாங்குவதற்கு, நிதியுதவி அளிக்கப்படும்.

பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய படிப்புகளில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயில்வோர், பட்டயப் படிப்பு பயில்வோர், தொழிற்பயிற்சி கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி பயில்வோருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர் வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, முதல் 10 இடங் களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இந்த நிதியுதவிகளை பெறு வதற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31. விண்ணப் பங்களைப் பெற “செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம் பேட்டை, சென்னை-6” என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்புகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 24321542 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டும், www.labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்தும் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in