

தஞ்சை, அரவக்குறிச்சியில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட எந்த தடையும் இதுவரை விதிக்கப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ''அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் அதிக அளவு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை தொடர்ந்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், இந்த 2 தொகுதிகளில் ஏற்கெனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட இதுவரை எந்த தடை உத்தரவும் தேர்தல் ஆணையம் விதிக்கவில்லை'' என்று கூறியுள்ளார்.