Published : 19 Oct 2016 10:14 AM
Last Updated : 19 Oct 2016 10:14 AM

30 ஆண்டுகளுக்குப் பிறகு 32 பட்டு டிசைன்கள் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் கோ-ஆப்டெக்ஸ்: சில மாதங்களிலேயே ரூ.80 லட்சத்துக்கு விற்பனை

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் இருந்த, 32 பாரம்பரிய பட்டு டிசைன்களை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். இதன்மூலம், காஞ்சி புரத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் கைத்தறி பட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்குப் புத்துயிர் அளித்துள்ளது.

நெசவாளர்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தி, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக அரசால் உருவாக்கப்பட்டது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். நாடு முழுவதும் 202 விற்பனை நிலையங்களில் அனைத்து வகையான ஜவுளிகளையும் விற்பனை செய்யும் இந்நிறுவனம், நெசவாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்குகிறது.

பட்டுச் சேலைகள் விற்பனையில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் புழக்கத் தில் இருந்த பாரம்பரிய பட்டு கைத்தறி டிசைன்களை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டுவந்துள் ளது.

இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் கோவை மண்டல மேலாளர் ஆர்.சுரேஷ்குமார், வடி வமைப்பு மேலாளர் பி.பாலமுரு கன் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: நவீன டிசைன்க ளின் வருகையால் பாரம்பரிய பட்டு டிசைன்கள் பல மறைந்து விட்டன. இவற்றை மீட்டெடுக்க முயன்றோம்.

காஞ்சிபுரத்தில் உள்ள 6 பட்டு கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம், புராதன ரகங் களான சீர்முந்தி, டைமண்ட், மாங்கா புட்டா, ருத்ராட்சம், அன்னப் பறவை, ரெட்டைநெளி, மல்லி மொக்கு, அறைமாடம், மயில்கண், துத்தரிப்பூ, கோல்டுகாயின் புட்டா, ஜடைநாகம், குதிரை, யானை, இருதலைப்பட்சி, பிள் ளையார்மொக்கு, டெம்பிள் ரேக், தாழம்பூ, கந்தபெருண்டாபட்டு, மயில் உள்ளிட்ட 32 ரகங்களை பாரம்பரிய முறையில் நெய்ய ஆர்டர் கொடுத்தோம்.

காஞ்சிபுரத்தில் உள்ள 1,000-க் கும் மேற்பட்ட நெசவாளர்கள் இவற்றை நெய்தனர்.

சுமார் ரூ.5.5 கோடி மதிப்பிலான பட்டுச் சேலைகளை அவர்களிடம் இருந்து பெற்று, இந்தியாவில் தேர்ந்தெ டுக்கப்பட்ட 50 கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங் களுக்கு அவற்றை அனுப்பி வைத்தோம்.

‘வின்டேஜ் காஞ்சிபுரம்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த பட்டு ரகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு முழு அளவில் இதன் விற்பனையைத் துரிதப்படுத் தியுள் ளோம். இவை குறைந் தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.65 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன.

கடந்த ஆண்டு பட்டு ரகங்கள் ரூ.50 லட்சத்துக்கு விற்பனையான நிலையில், பாரம்பரிய டிசைன்களை அறிமுகம் செய்த சில மாதங்களிலேயே தற்போது ரூ.80 லட்சம் வரை விற்பனையாகியுள் ளது குறிப்பிடத்தக்கது என்றனர்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத் தின் மக்கள் தொடர்பு மேலாளர் ஆர். நடராஜன் கூறும்போது, “தீபா வ ளியை முன்னிட்டு குறைந்த எடை கொண்ட தினசரி பயன்பாட்டுக்கு உகந்த, குறைந்த விலையிலான பட்டுச் சேலைகளையும் கோ- ஆப் டெக்ஸ் அறிமுகப்படுத்தி உள் ளது. இவை, சேலம், ராசிபு ரம், ஆரணி பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படுகின்றன.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத் தைப் பொறுத்தவரை எப்போ தும் ஒரே விலைதான். தனியாரைப் போல விலையை அதிகரித்து தள்ளுபடி அளிப்பதில்லை. அரசே 30 சதவீத தள்ளுபடியை வழங்கு கிறது. இந்நிறுவனத்தால் ஆயிரக் கணக்கான நெசவாளர்கள் பயன டைகின்றனர்” என்றார்.

“நவீன ஆடைகளின் வருகையில், பாரம்பரிய ரகங்கள் அருகி வரும் நிலையில், 30 ஆண்டுகளுக்கு முந்தைய டிசைன்களை மீட்டெ டுக்க கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால், பாரம்பரிய முறையில் கைத்தறி நெசவு செய்து வந்த நெசவாளர்கள் பயனடை கின்றனர்.

இந்தத் திட்டத்தை விரிவுபடுத் தும் போது, இன்னும் கூடுதலாக பாரம்பரிய பட்டு கைத்தறி நெசவா ளர்கள் பயனடைவார்கள்” என்று நெசவாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x