

சென்னை வியாசர்பாடியில் இருந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் தங்க சாலையை நோக்கி டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. லாரியை கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரகாஷ்(20) என்பவர் ஓட்டினார். பேசின் பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறு மாறாக ஓடி, பாலத்தின் கைப்பிடி சுவரில் மோதி, உடைத்துக் கொண்டு கீழே கூவம் ஆற்றில் விழுந்தது.
சுமார் 30 அடி உயரத்தில் இருந்து ஆற்றுக்குள் தலைகுப்புற விழுந்ததால் லாரி, தண்ணீரில் மூழ் கியது. லாரியை ஓட்டிய பிரகாஷ் வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டார். அந்த வழியாக சென்ற வர்கள் உடனே போலீஸ் கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் தெரிவித் தனர். வண்ணாரப்பேட்டை போக்கு வரத்து போலீஸார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பேசின் பாலம், வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி யில் இருந்து 4 வாகனங்களில் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ரப்பர் படகு மூலம் ஆற்றுக்குள் இறங்கி ஓட்டுநரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். லாரியின் முகப்பு பகுதி கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த பிரகாஷை வெளியே எடுத்தனர். தயாராக நின்றிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழி யர்கள் பிரகாஷை சோதித்துப் பார்த்து அவர் இறந்துவிட்டதாக தெரி வித்தனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் லாரியை மீட்கும் முயற்சியில் போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர். ஆற்றுக்குள் கவிழ்ந்த லாரி, 12 சக்கரங்களைக் கொண்ட டிப்பர் லாரி ஆகும். எனவே அதிக எடை தூக்கும் 2 கிரேன்கள் சம்பவ இடத்துக்கு கொண்டுவரப்பட்டு மீட்புப் பணி நடைபெற்றது. கால்வாய் ஓரத்தில் ராட்சத கிரேன் செல்ல வழியில்லாததால் லாரியை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. ராட்சத கிரேனை பாலத்தில் நிறுத்தி, இரும்பு கயிறு மூலம் கட்டி லாரியை வெளியே எடுத்தனர்.
இதனால் பேசின் பாலத்தில் நேற்று காலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. எனவே பேசின் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதை வழி யாக வாகனங்கள் திருப்பி விடப் பட்டன. லாரியின் உரிமையாளர் கொருக்குப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன். இவரது உறவினர்தான் பிரகாஷ். நேற்று இரவில் லாரியை பிரகாஷ் ஓட்டிச்சென்றபோது மூலக்கொத்தளம் அருகே டீசல் இல்லாமல் நின்று இருக்கிறது. உடனே, அருகில் இருந்த பங்குக்கு சென்ற பிரகாஷ், கேனில் டீசல் வாங்கி வந்து, பின்னர் லாரியை ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கியிருக்கிறார்.
லாரி விபத்துக்குள்ளானதை முதலிலேயே அறிந்த பார்த்திபன், கூட்டத்தினருடன் நின்று கொண்டே வேடிக்கை பார்த்திருக்கிறார். தாம்தான் லாரியின் உரிமையாளர் என்ற தகவலை அங்கிருந்த போலீஸாரிடம் கூட அவர் தெரிவிக்கவில்லை. லாரியின் பதிவு எண்ணை வைத்து முகவரியை கண்டுபிடித்த போலீஸார், பார்த்திபனை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.