தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: ஜி.கே.வாசன், இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: ஜி.கே.வாசன், இரா.முத்தரசன் குற்றச்சாட்டு
Updated on
2 min read

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று 2-வது நாளாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். காவிரி பிரச்சி னையில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். தமிழக விவசாயிகள் மத்திய குழுவிடம் நியாயம்தான் கேட்கின்றனர். அறிவுரைகளை அல்ல. டெல்டா மாவட்ட விவசாயி களை பாதிக்கும் மீத்தேன் போன்ற எந்தத் திட்டத்தையும் தமாகா ஏற்காது. விவசாய சங்கங்கள் நடத்திய 2 நாள் ரயில் மறியல் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

மத்தியில் ஆளும் அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதால், தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, சரி யான நடவடிக்கை எடுக்க வேண் டும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளின் பயிர் காப்பீடு தொகையை தமிழக அரசே ஏற்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

இரா.முத்தரசன்

திருவாரூர் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற மறியல் போராட் டத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் கூறும்போது, “இதுவரை தமிழகத்துக்கு துரோகம் இழைத்ததுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா வன்முறையில் ஈடுபட்டபோதும், மத்திய அரசு நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை.

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர் பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தமிழகத்துக்கு நீதி வழங்க முற்பட் டது. அதை கர்நாடக அரசும், மத்திய அரசும் தடுத்து நிறுத்திவிட்ட நிலையில், தற்போது தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் மூலம், தமிழகத்துக்கு உச்ச நீதி மன்றம் நீதி வழங்கும் என நம்பு கிறோம். ஒருவேளை தமிழகம் வஞ்சிக்கப்படுமானால், வெவ்வேறு வடிவங்களிலான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்” என்றார்.

பி.கே.தெய்வசிகாமணி

விவசாய சங்கங்களின் கூட்டியக் கத் தலைவர் பி.கே.தெய்வ சிகாமணி கூறியபோது, “2 நாள் ரயில் மறியல் போராட்டம் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. இந்த போராட்டங்களைப் பார்த்தா வது மத்திய அரசு நியாயம் வழங்கவில்லை என்றால், தமிழக உரிமை காக்கும் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். அனைத்துக் கட்சியினருடன் இணைந்து குடிய ரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவோம். 10 லட்சம் விவ சாயிகள் சென்னையில் பேரணி யாகச் சென்று ஆளுநர் மாளி கையை முற்றுகையிடுவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இதுபோன்ற போராட்டங்கள் தொடரும்” என் றார்.

த.வெள்ளையன்

தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறியபோது, “காவிரி பிரச்சினையில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும், தற்போது ஆட்சி செய்யும் பாஜக வும் கர்நாடகாவில் நடைபெறும் தேர்தலை மனதில் வைத்தே, தமி ழகத்துக்கு துரோகம் செய்து வரு கின்றன. இது, தேசிய ஒருமைப் பாட்டை கேள்விக்குறியாக்கி உள்ளது. தமிழக மக்கள் இந்த மண்ணில் இருந்து காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in