

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் புகழை பரப்ப வேண்டியது தமிழர்களின் கடமை என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.
சிங்கப்பூர் முன்னாள் அதிபரான எஸ்.ஆர்.நாதனின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வு சென்னை ராயப்பேட்டை இந்திய அலுவலர்கள் கூட்டமைப்பு அலு வலக அரங்கில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று எஸ்.ஆர்.நாதனின் உருவப் படத்தை திறந்து வைத்த ஆர்.நல்ல கண்ணு பேசியதாவது:
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுடன் எனக்கு நேரடி தொடர்பு கிடையாது. ஆனால், அவ ரைப் பற்றி அண்மையில்தான் தெரிந்து கொண்டேன். தஞ்சையை பூர்வீகமாக கொண்ட எஸ்.ஆர்.நாதனின் முன் னோர் 4 தலைமுறைக்கு முன்பாக மலேசியா சென்றனர். அந்த வழியில் வந்த எஸ்.ஆர்.நாதன் எளிய குடும்பத் தில் இருந்து உழைப்பால் சிங்கப்பூர் நாட்டின் அதிபராக உயர்ந்துள்ளார்.
சிங்கப்பூரை உருவாக்கிய லீ குவான் யூவுடன் நெருங்கி பழகிய எஸ்.ஆர்.நாதன், 1999 முதல் 2011 வரை 2 முறை போட்டியின்றி அதிபராக தேர்வு செய் யப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் வளர்ச்சிக் காகவும், சிங்கப்பூர் தமிழர்களின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த எஸ்.ஆர்.நாதனின் பெருமைகளை அவரது மறைவுக்குப் பிறகுதான் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. 4 தலைமுறைக்கு முன்பு தாயகத்தை விட்டு சென்றிருந்தாலும், எஸ்.ஆர்.நாதனுக்கு மிகுந்த தமிழுணர்வு இருந் திருக்கிறது. அயலகம் செல்கிற தமிழர் களுக்கு இருக்கிற தமிழ் உணர்வு, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இல்லை என்பது வேதனையான விஷயம். எஸ்.ஆர்.நாதனின் பெருமைகளை பரப்ப வேண்டியது தமிழர்களின் கடமை. இவ்வாறு நல்லகண்ணு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற புதிய பார்வை ஆசிரியர் எம்.நடராசன் பேசியதாவது:
எஸ்.ஆர்.நாதனை இரண்டொரு முறை சந்தித்திருக்கிறேன். மிகவும் எளிமையான, நேர்மையான மனிதர். ஒருமுறை சிங்கப்பூர் சென்றிருந்தபோது அவரை சந்தித்தேன். இரு பாதுகாவலர் களை மட்டுமே அவர் உடன் அழைத்து வந்திருந்தார். ஆனால், இங்கு வாக் களித்து அதிகாரத்தை வழங்கிய மக்க ளுக்கு பயந்து ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன்தான் நமது தலைவர்கள் வலம் வருகின்றனர். எஸ்.ஆர்.நாதன் சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்காக பல்வேறு அரும்பணிகளை செய் துள்ளார். அவரைக் கொண்டாட வேண்டியது நமது பொறுப்பு என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் முன்னாள் எம்பி ஆர்.ரவீந்திரன், முனைவர் வாசுகி கண்ணப்பன், தமிழர் களம் ஆசிரியர் ஏர்போர்ட் த.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.