

ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு உதவ மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் விரைவில் அளிக்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (தெற்கு மண்டலம்) சார்பில் 2013-14, 2014-15 ஆண்டுகளில் தெற்குமண்டலத்தில் ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 20-க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தி லிருந்து ‘டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட்ஸ்’ நிறுவனம், ‘மியாட் மருத்துவமனைக் குழுமம்’, ‘ஆச்சி மசாலா’ உள்ளிட்ட நிறுவனங்கள் விருதுகளைப் பெற்றன.
விருதுகளை வழங்கி நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஏறறுமதி நிறுவனங்கள் பல் வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. ஏற்றுமதி நிறு வனங்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய அரசிடம் உடனுக் குடன் தகவல்களை தெரி வித்து அதுகுறித்து ஆலோ சனைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் பிரச்சினைகளின் தன்மைக்கு ஏற்ப குறைந்த கால அல்லது நிரந்தர தீர்வினை மத்திய அரசு வழங்கும்.
உலக அளவில் பொருளாதார நெருக் கடிகள் இருந்தாலும் ஆப்பிரிக்க நாடுகள், தென்அமெரிக்க நாடுகள், பொரு ளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நாடுகள் ஏற்றுமதி வணிகத்தில் நம்பிக்கை யுடன் செயல்பட்டு வருகின்றன. இத் தகைய சூழலில், இந்தியாவில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களும் நம்பிக்கை யுடன் செயல்பட வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உதவுவதற் காக ஒற்றைச்சாளர முறை உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை விரைவில் தொடங்க உள்ளோம். இதுதொடர்பாக அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி வருகிறோம். இதன்மூலம் ஏற்றுமதி நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள வர்த்தக சூழல் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். தங்களது உற் பத்திகளுக்கு ஏற்ற சந்தையையும் அடை யாளம் காணலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி.ரால்ஹன், கூட்டமைப்பின் தெற்கு மண்டல தலைவர் ஏ.சக்திவேல், தலைமை செயல் அதிகாரி அஜய் சகாய் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.