3 தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

3 தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
Updated on
1 min read

தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப் பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று (26-ம் தேதி) தொடங்குகிறது. நவம்பர் 2 வரை மனுத் தாக்கல் செய்யலாம். 3-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற 5-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. நவம்பர் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in