தமிழக அரசு உடனடியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் - பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி நேற்று பாஜகவில் இணைந்தார். படம்: பு.க.பிரவீன்
சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி நேற்று பாஜகவில் இணைந்தார். படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சென்னை: கருத்து கேட்டு காலத்தை கடத்தாமல், ஆன்லைன் ரம்மியை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டவர் அர்ஜுன மூர்த்தி. இவர் ஏற்கெனவே பாஜகவில் இருந்தவர். அரசியலுக்கு வரவில்லை என ரஜினி அறிவித்துவிட்டதால், அர்ஜுன மூர்த்தி தனிக்கட்சி தொடங்கினார்.

இந்நிலையில், அர்ஜுன மூர்த்திமீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு சால்வை அணிவித்து உறுப்பினர்அடையாள அட்டையை மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

ஆன்லைன் ரம்மியால் சுமார் 30 தற்கொலைகள் நடந்துள்ளன. எனவே, கருத்தைக் கேட்டு காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்யவேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு பாஜக ஆதரவு அளித்து வருகிறது. அதேநேரத்தில் ஆகம விதிகளை மனதில் வைத்து செயல்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in