‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ திட்டத்தின்கீழ் மேலும் 25 ரயில் நிலையங்களில் அரங்குகள் அமைக்க திட்டம்

‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ திட்டத்தின்கீழ் மேலும் 25 ரயில் நிலையங்களில் அரங்குகள் அமைக்க திட்டம்
Updated on
1 min read

சென்னை: ‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் மேலும் 25 ரயில் நிலையங்களில் அரங்குகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூர் வணிகத்தை ஊக்கப்படுத்தவும், கைவினைஞர்கள் தயாரித்த பொருட்களை பிரபலப்படுத்தும் வகையிலும், ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத் திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளின் அரங்கு கடந்தமார்ச் 25-ம் தேதி அமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பல்வேறு ரயில் நிலையங்களில் படிப்படியாக அரங்குகள் விரிவுபடுத்தப்பட்டன. தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய6 கோட்டங்களில் உள்ள 89 ரயில்நிலையங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையங்களில் பட்டுப்புடவைகள், ஜவுளிகள், பனைவெல்லம், பழனி பஞ்சாமிர்தம், திருவில்லிபுத்தூர் பால்கோவா, கைவினைப் பொருட்கள் என்று பல்வேறு பொருட்கள் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, மேலும் பல ரயில் நிலையங்களில் இத்திட்டம் விரிவுபடுத் தப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in