

தூத்துக்குடியில் வழக்கறிஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். வழக்கறிஞர் சங்கத்தலைவரை கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக இருப்பவர் டி.மைக்கிள் ஸ்டேனிஸ் பிரபு. இவர் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். அண்மையில் வழக்கறிஞர் கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட போது சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் களில், தூத்துக்குடியைச் சேர்ந்த 10 வழக்கறிஞர்களும் அடங்குவர்.
இதற்கு, மைக்கிள் 2ஸ்டேனிஸ் பிரபு தான் காரணம் என புகார் கூறி, ஒரு தரப்பு வழக்கறிஞர்கள் கூட்டம் நடத்தி னர். பிரபுவை தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றினர். ‘தேர்வு செய்யப்பட்ட தலைவராகிய தன்னை யாராலும் நீக்க முடியாது’ என பிரபு தெரிவித்தார். புதிதாக தலைவரைத் தேர்வு செய்ய இன்று தேர்தல் நடத்தப்படும் என எதிர் தரப்பினர் அறிவித்தனர். ஆனால், இந்த தேர்தலுக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் தடை விதித்ததால் தேர்தல் ரத்து செய்யப் பட்டது.
இப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2 மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் காலை யில் இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த வழக்கறிஞர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது பிரபுவுக்கும், தூத்துக்குடி அசோக் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் லெ.ரகுராமன்(42) என்பவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது கத்திக்குத்தில் காயமடைந்த வழக்கறிஞர் ரகுராமனை, சக வழக்கறி ஞர்கள் மீட்டு தனியார் மருத்துவமனை யில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபு, அவரது கார் ஓட்டுநர் காளி மற்றும் 6 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பிரபு உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்யக் கோரி வழக்கறிஞர் சங்கச் செயலாளர் சுரேஷ்குமார் தலை மையில், 50-க்கும் மேற்பட்ட வழக்கறி ஞர்கள் நேற்று காலை, தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஏடிஎஸ்பி கந்தசாமி, ரூரல் டிஎஸ்பி சீமைசாமி மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பின், மறியலை வழக்கறிஞர்கள் கைவிட்டனர்.