

காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு, என்எல்சி மின் சாரத்தை அனுப்பக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் என்எல்சி ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிற்சங்கத்தினர் இணைந்து என்எல்சி தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டத்தை அறி வித்திருந்தனர்.
அதன்படி நேற்று காலை விவசாயிகள், ஜீவா தொழிற்சங்கத்தினர் என்எல்சி ஆர்ச் கேட் எதிரே திரண்டனர்.
விவசாய சங்க ஒருங்கிணைப் பாளர் விநாயகமூர்த்தி தலை மையில் தொழிலாளர்களும், விவசாயிகளும் என்எல்சி தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை, இந்திரா நகர் குறுக்கு ரோடு சந்திப்பில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். போலீஸாரின் தடுப்பை மீறி போராட்டக் குழுவினர் முற்றுகை யிட சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 157 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, விவசாயிகள் ஒருங் கிணைப்பு போராட்டக் குழு தலை வர் பி.ஆர்.பாண்டியன் பேசும் போது, “தமிழக எம்பிக்களால் பிரதமரை சந்தித்து காவிரி பிரச்சினை சம்பந்தமாக எடுத் துரைக்க முடியவில்லை. அவர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். என்எல்சியில் இருந்து 600 மெகாவாட் மின்சாரம் கர் நாடகாவுக்கு அனுப்பப்படுவதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் விரைவில் லட்சக்கணக் கான விவசாயிகளை ஒருங்கி ணைத்து போராட்டம் நடத்து வோம்” என்றார்.