அப்போலோவில் டாக்டர்களின் கண்காணிப்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை: உடல்நிலையில் முன்னேற்றம் என தகவல்

அப்போலோவில் டாக்டர்களின் கண்காணிப்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை: உடல்நிலையில் முன்னேற்றம் என தகவல்
Updated on
2 min read

லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள் மற்றும் அப்போலோ மருத்துவமனை டாக்டர்களின் கண்காணிப்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிங்கப் பூர் டாக்டர்கள் குழுவினர் பிசியோ தெரபி உள்ளிட்ட சிகிச்சை கள் அளித்ததாகவும் இதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் நுரை யீரல் சிகிச்சை, நோய் தொற்றுக் கான மருந்துகள், எதிர்ப்பு சக்தி மருந் துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஊட்டச்சத்து, பிசியோதெரபி சிகிச் சைகளும் தொடர்ந்து அளிக்கப் படுகின்றன.

முதல்வரின் உடல்நிலையை அப்போலோ மருத்துவர்கள் தீவிர மாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில், 3-வது முறையாக சென்னை வந்துள்ள லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட குழுவினரும் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிங்கப்பூர் டாக்டர்

நேற்று மாலை 6.15 மணி அளவில் எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் மருத்துவமனைக்குள் சென்றனர். முதல்வரின் உடல்நிலையை பரிசோதனை செய்த அவர்கள், அடுத்தகட்ட சிகிச்சைகள் குறித்து டாக்டர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். மாலை 6.45 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்.

மேலும், சிங்கப்பூர் மவுன்ட் எலிச பெத் மருத்துவமனையின் டாக்டர் கள் குழுவினர் முதல்வருக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சை கள் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதை மருத்துவமனை நிர்வாகம் உறுதிப் படுத்தவில்லை. தொடர் சிகிச்சையில், முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வரின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அப்போலோ மருத்துவமனை தரப்பில் கடந்த 10-ம் தேதி செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதன்பிறகு எந்த தகவலும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன், புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து அமைச்சர்கள் மற்றும் டாக்டர் களிடம் கேட்டறிந்தனர்.

அப்போலோவுக்கு நடைபயணம்

கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் சுவாமி லட்சுமிபதி. சமூக ஒற்றுமையை வலியுறுத்தி இவர் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ஆந்திராவுக்கு வந்த போது, தமிழக முதல்வர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தகவலைக் கேள்விப் பட்டுள்ளார். இதையடுத்து, அங் கிருந்து ஒரு வாரமாக நடந்து, அப் போலோ மருத்துவமனைக்கு நேற்று வந்தார். முதல்வர் விரைவில் குண மடைய பிரார்த்தனை செய்வதாக அவர் தெரிவித்தார். முதல்வர் விரைவில் பூரண குணமடைய வேண்டி மருத்துவமனை முன்பு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் நேற்றும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in