

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குண மடைய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரி வித்துள்ளார். அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘தமிழக முதல் வர் ஜெயலலிதாவுக்காக பிரார்த்திக் கிறேன். அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.