

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக பொதிகை தொலைக்காட்சியில் ‘குறையொன்றுமில்லை’ என்ற தொடர் நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ‘தி இந்து’வுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை வழங்குகிறது.
இன்று இரவு ஒளிபரப்பாகும் 54-வது அத்தியாயத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1970 - களில் ஆற்றிய இசைப் பணியின்போது நடந்த முக்கிய நிகழ்வுகள், சுவையான பாடல்களுடன் சுவாரஸ்யமான பேட்டிகளும் இடம்பெறுகின்றன. பொக்காரோ ஸ்டீல் நகரத்தில் உள்ள பொக்காரோ தமிழ் மன்றத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் இசை நிகழ்ச்சி, 1973-ம் ஆண்டில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் அமைப்பு வழங்கிய கவுரவ விருது, 1976-ம் ஆண்டில் சென் னையில் நடந்த ஆஃப்ரோ ஏசியன் ஆப்தால்மாலஜி மாநாட்டில் சமஸ் கிருதம், ஆங்கிலம், உருது, ஜப் பானிய மற்றும் தமிழ் ஆகிய 5 மொழிகளில் எம்.எஸ்.சுப்புலட் சுமி பாடிய இறை வணக்கப் பாடலும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். மேலும் இசை மூலம் வட திசையையும், தென் திசையையும் இணைக்கும் விதமாக காசி ராமேஸ்வரம் சுப்ரபாதங்களை இசைத்த நிகழ்வுகள் இடம்பெறும்.
இந்நிகழ்ச்சியின் மறு ஒளி பரப்பை செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காணலாம்.