

மதுரை அருகே தோட்டத்துக்குள் பதுக்கி வைத்திருந்த வெடிமருந்து களை பெட்டி, பெட்டியாக போலீ ஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திமுக முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் மீது வழக் குப் பதியப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள பூச்சம்பட்டியில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. டி.ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான குவாரி உள்ளது. இதனருகே உள்ள விவசாயத் தோட் டங்களில் வெடிமருந்துகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்தி ருப்பதாக, ஓ.சி.ஐ.யூ. (திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவு பிரிவு) போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஓசிஐயூ இன்ஸ் பெக்டர் சொக்கலிங்கம், எஸ்.ஐ ஜெய்சங்கர், தனிப் படை எஸ்.ஐ. சிவபாலன் தலைமை யிலான போலீஸார் வியாழக் கிழமை காலை அங்கு சென்று டி.ராதாகிருஷ்ணனின் குவாரி யில் அதிரடி சோதனை மேற்கொண் டனர். பின்னர் அருகிலுள்ள பால்ரெட்டியார் என்பவரது ஆமணக் குத் தோட்டத்தில் சோதனை செய்தபோது ஜெல்-90 வகையைச் சேர்ந்த 2479 வெடிமருந்துகள், 771 எலெக்ட்ரானிக் டெட்டனேட்டர்களை பெட்டி பெட்டியாக புதைத்து வைத்திருந்ததை கண்டறிந்தனர். அவற்றைத் தோண்டி எடுத்து பறி முதல் செய்தனர்.
வெடிமருந்துகளை பதுக்கி வைத் திருந்ததாக முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், திண்டுக்கல்லைச் சேர்ந்த வெடிமருந்து வியாபாரி வீரமணி, குவாரி மேலாளர் சிவா (31), சூப்பர்வைசர் கலாசேகர் (55), காவலாளி மலைச்சாமி (55), டிரைவர் ஜெகன் (27), வெடிமருந்துகளை வெடிக்கச் செய்யும் ஊழியர்களான கிருஷ் ணன் (32), நாகராஜன் (33) ஆகிய 8 பேர் மீது வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவர் களில் ராதாகிருஷ்ணன், வீரமணி யைத் தவிர மற்ற 6 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே, பால்ரெட்டியார் தோட்டத்துக்கு அருகிலுள்ள ரவிச் சந்திரன் என்பவரது தோட்டத்திலும் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஜெல் 90 வகையைச் சேர்ந்த 60 வெடி மருந்துகள், 38 எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர். இவற்றைப் பதுக்கி வைத்திருந்ததாக அயூப்கான் (50), ரவிச்சந்திரன் (33), திண்டுக் கல்லைச் சேர்ந்த வெடிமருந்து வியாபாரி வீரமணி, முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய் தனர்.
இதில் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டார். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.