“இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம்” - முதல்வர் ஸ்டாலினின் சென்னை தின வாழ்த்து

“இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம்” - முதல்வர் ஸ்டாலினின் சென்னை தின வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: "திராவிட மாடல் ஆட்சிக் காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்" என்று சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்றைக்கு 383-வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக் காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்.

இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in