

பண்டிகைக் காலங்களில் ஆம்னி பஸ்களைப்போல், ரயில்வேயும் பிரீமியம் டிக்கெட் என்ற பெயரில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறது. அதிக வருவாய் கிடைக்கும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வெளியூர்களில் வசிப்பவர்கள் பண்டிகைக் காலத்தில் குடும்பத் துடன் தங்களது சொந்த ஊர் களுக்கு செல்கின்றனர். ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்கின்றனர். எதிலும் முன்பதிவு செய்யாதவர்களும், கடைசி நேரத்தில் ஊருக்குச் செல்ல முடிவு எடுப்பவர்களும் பண்டிகை நாட்களில் ரயில், பஸ் நிலையங்களில் டிக்கெட் கிடைக் காமல் அலைமோதுகின்றனர்.
இதுவரை பண்டிகைக் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஆம்னி பஸ்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில், ரயில்வே நிர்வாகம் மீதும் இதே குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. தற்போது பண்டிகைக் காலங் களில் ரயில்வே சார்பில் முக்கிய நகரங்களில் இருந்து ‘சுவிதா’ என்ற பெயரில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏசி, படுக்கை வசதி பெட்டிகள் மட்டுமே கொண்டி ருக்கும் சுவிதா ரயிலில் குறிப் பிட்ட அளவு டிக்கெட்கள் மட்டும் வழக்கமான கட்டணத்தில் வழங்கப் படும். அதன் பிறகு பிரீமியம் டிக்கெட் என்ற பெயரில் ஒவ்வொரு டிக்கெட்டும் வழக்கமான கட்டணத் தைவிட கூடுதலாக விற்கப்படும். எப்படியாவது ஊருக்குச் செல்ல வேண்டும் என்று கருதுபவர்கள் கூடுதல் கட்டணத்துக்கு டிக்கெட் வாங்கி ரயில்களில் பயணிக் கின்றனர்.
இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர் ரவி, ‘தி இந்து’உங்கள் குரல் பதிவில் கூறியதாவது: பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் மறுமார்க்கத்தில் வெறுமனேதான் செல்ல வேண்டும். அதற்கான டீசல் செலவையும் சேர்த்துதான் சென்னை மதுரைக்கு ஒரு நபருக்கு ரூ.750 கட்டணம் வசூல் செய்கிறோம்.
ரயில்களில் பிரீமியம் டிக்கெட் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மத்திய அரசே பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் ஆம்னி பஸ்களை மட்டும் அனைவரும் குறை சொல்கின்றனர் என்றார்.
சென்னையில் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த முகிலன் கூறும்போது, “பயணிகளின் அவசரத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களும், ரயில்வே நிர்வாகமும் பணம் ஈட்டுகின்றன. கூடுதல் வருவாய்க்காக ஏற்கெனவே இயங் கும் பெரும்பாலான ரயில்களை சுவிதா ரயில் என்ற பெயரில் ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகி றது. இதனால் நடுத்தர வகுப் பைச் சேர்ந்த பயணிகள் பாதிக்கப் படுகின்றனர். ஆம்னி பஸ்களில் மட்டுமல்ல, ரயில்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும்” என்றார்.