சென்ட்ரல் மேம்பாலத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: மாற்றுப்பாதையில் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுமா?

சென்ட்ரல் மேம்பாலத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: மாற்றுப்பாதையில் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுமா?
Updated on
1 min read

சென்னை சென்ட்ரல் எதிரே உள்ள மேம்பாலத்தில் அணி வகுத்து நிற்கும் மாநகர பேருந்து களால் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. இதனால், சரியான நேரத் துக்கு ரயில்களை பிடிக்க முடியா மல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக சென்ட்ரல் ரயில் நிலையம் இருக்கிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாசாலை வழியாக வரும் மாநகர பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் பிராட்வேக்கு செல்ல இது முக்கிய வழித்தடமாக இருக்கிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் சாலைகளும் குறுகியதாக உள்ளன. இந்நிலையில் ஏராளமான வாகனங்கள் அப்பகுதியை கடப்பதால் சென்னை சென்ட்ரல் எதிரே உள்ள மேம்பாலம் எப்போதும் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “ரயில் மற்றும் பேருந்துளில் மாறிச் செல்லும் முக்கிய போக்குவரத்து மையமாக சென்ட்ரல் ரயில் நிலையமும், அரசு பொதுமருத்துவமனை பேருந்து நிறுத்தமும் இருக்கிறது. ஆனால், அங்கு சீரான வாகனங்கள் செல்ல போதிய வசதிகள் இல்லை. சென்ட்ரலில் இருந்து பல்லவன் சாலை வரையிலும், அரசு பொதுமருத்துவமனை பேருந்து நிறுதத்தில் இருந்து ரிப்பன் மாளிகை வரையிலும் இருபுறமும் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சென்ட்ரல் மேம்பாலத்தில் மட்டுமே சுமார் 20 நிமிடங்கள் காலதாமதம் ஏற்படுகின்றன. இதனால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், சிலர் விரைவு ரயில், மின்சார ரயில்களை நேரத்துக்கு பிடிக்க முடியாமல் போய்விடுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிராட்வே செல்லும் மாநகர பேருந்துகளில் 40 சதவீத பேருந்துகள் பல்லவன் சாலையை ஒட்டியுள்ள அண் ணாசாலை வழியாக நேரடியாக இயக்கப்பட்டன. அதுபோல் தற்போதும் கணிசமான பேருந்துகளை இயக்கினால் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும், நேரத்தையும் சேமிக்க முடியும்’’ என்றனர்.

இது குறித்து மாநகர போக்கு வரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அண் ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ் சாலைகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் தற்போது இப்பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்தால் போக்குவரத்து சீராக இருக்கும் என நம்புகிறோம். மெட்ரோ பணிகள் முடிந்த பிறகும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், அண்ணாசாலை வழியாக பிராட்வேக்கு நேரடியாக பேருந்துகளை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in