தீபாவளி பண்டிகையையொட்டி முக்கிய நகரங்களில் ஒலி, காற்று மாசு அளவிட திட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி முக்கிய நகரங்களில் ஒலி, காற்று மாசு அளவிட திட்டம்
Updated on
1 min read

தீபாவளி அன்று சென்னை உள்ளிட்ட 11 முக்கிய நகரங்களில் ஒலி மாசு மற்றும் காற்று மாசு ஆகியவை குறித்து ஆய்வு நடத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தான் பட்டாசு வெடிக்க வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய எதையும் வெடிக் கக்கூடாது என உச்ச நீதிமன்றம் 2005-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வோர் ஆண்டும் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு குறித்தும், அதிக ஒலி எழுப்பும் வெடியால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் மற்றும் தீபாவளி அன்று என 2 தினங்களில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோவை, திரு நெல்வேலி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், ஓசூர், கடலூர் ஆகிய 11 நகரங்களில் ஒலி மாசு மற்றும் காற்று மாசு குறித்து அளவீடு செய்யப்பட உள்ளது.

இது பற்றி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, “தமிழகத்தில் 11 நகரங்களில் ஒலி மாசு மற்றும் காசு குறித்து தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய தினங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. பட்டாசு விற்பனையாளர்களிடம், அதிகபட்ச ஒலி அளவான 125 டெசிபலுக்கு மேல் ஒலி ஏற்படுத்தும் எந்தவித பட்டாசுகளையும் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in