வானூர் அருகே பட்டாசு தொழிற்சாலை தரைமட்டம்: வெடி விபத்தில் 5 பேர் பலி; 10 பேர் காயம்

வானூர் அருகே பட்டாசு தொழிற்சாலை தரைமட்டம்: வெடி விபத்தில் 5 பேர் பலி; 10 பேர் காயம்
Updated on
1 min read

வானூர் அருகே நேற்று பிற்பகல் பட்டாசு தொழிற்சாலையில் ஏற் பட்ட பயங்கர வெடி விபத்தில் தொழிற்சாலை தரைமட்டமானது. இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயமடைந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ரவுத்தன்குப்பம் கிராமத் தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், துருவை கிராமத்தில் அரசு அனுமதி யுடன் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இம்மாதம் 29-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருப்பதால் சிவகாசி தொழிலாளர்களுடன் உள்ளூர் தொழிலாளர்களும் இணைந்து பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணி யளவில் பட்டாசு தொழிற்சாலை யில் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு தயாரிப்பு கூடமும், பட்டாசுகளை இருப்பு வைக்கும் கிடங்கும் வெடித்துச் சிதறின. சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து வெடிகள் வெடித்தபடி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சப்தம் அருகில் இருந்த திருச்சிற்றம்பலம், ஆச்சாரங் குப்பம், புளிச்சப்பள்ளம், புதுச்சேரி மாநில எல்லையான சஞ்சீவி நகர் உள்ளிட்ட கிராமங்களிலும் கேட் டது. வெடி விபத்தில் அருகில் இருந்த தென்னை மரங்கள் தீயில் கருகின. சுமார் 4 டன் எடை உள்ள பட்டாசுகள் வெடித்ததால், 2 கான்கிரீட் கட்டிடம் தரைமட்ட மாயின.

இந்த விபத்தில் சுமார் 500 அடி தொலைவில் உடல் சிதைந்த நிலையில் தொழிலாளியின் உடல் கிடந்தது. மேலும் அருகில் உள்ள கருவேலங்காட்டில் மற்றொரு உடல் கிடந்தது. மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த மரக்காணம் அருகே வண்டிப்பாளையத்தை சேர்ந்த சர வணன்(30), புதுச்சேரி மணவெளி யைச் சேர்ந்த வசந்தா(40), பச்சை வாழி(50), சிவகாசி பகுதியைச் சேர்ந்த கானமுத்து(30), வேலு(35), ராமன்(38) உட்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த கண்ணகி கவலைக் கிடமான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

இறந்த 5 பேரில் 4 பேர் அடை யாளம் தெரிந்தது. அவர்கள் விவரம்: விருதுநகர் மாவட்டம், மேற்கு ஆனையூரைச் சேர்ந்த முத்து (38), பாலமுருகன்(30), மரக் காணம் அருகே வண்டிப்பாளை யத்தைச் சேர்ந்த ஏழுமலை (32), விழுப்புரம் அருகே பொய்யப்பாக் கத்தைச் சேர்ந்த கோபால் (28).

தகவலறிந்த சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப் புரம் ஆட்சியர் சுப்பிரமணியன், காஞ்சிபுரம் டிஐஜி நஜ்மல் ஹோடா, எஸ்பி நரேந்திரன் நாயர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தொழிற் சாலை உரிமையாளர் ரமேஷ் தலைமறை வானார். இதுகுறித்து ஆரோவில் போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in