

அரியலூர் மாவட்டம் சோழன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த வர் சமூக ஆர்வலர் விஸ்வ நாதன்(70). ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக புகார் தெரிவித்து வந்ததுடன், சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார்.
கடந்த மாதம் 13-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற விஸ்வநாதன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து விஸ்வநாதனின் மருமகள் அமுதா, குவாகம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில், சிலநாட் களுக்கு முன் குவாகம் பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக நின்ற நைனார்குடிக்காட்டைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.
இதில், பாலமுருகன், சிறுகளத் தூர் பாஸ்கர், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அழகர் உள்ளிட்ட சிலர் சேர்ந்து சமூக ஆர்வலர் விஸ்வநாதனைக் கொன்று, அவரது உடலை அரு கிலுள்ள வெள்ளாற்றில் புதைத் துள்ளதாக தெரிவித்தாராம். இதையடுத்து போலீஸார் 3 பேரையும் கைது செய்தனர். இதில், பாலமுருகன் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது. 3 பேரையும் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் இரவு விஸ்வ நாதனின் சடலம் தோண்டி எடுக்கப் பட்டது. பின்னர், அங்கேயே மருத் துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த கொலை வழக் கில் மேலும் சிலருக்கு தொடர் பிருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீஸார், தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், சிலரைத் தேடி வருகின்றனர்.
கொலையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி, விஸ்வநாதனின் உடலைப் பெற உறவினர்கள் மறுத்துவிட்டனர்.