

சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளின் கூட் டாளிகள் 4 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பழமையான கோயில்களில் உள்ள சுவாமி சிலைகளை திருடி வெளிநாடு களுக்கு கடத்தி வந்த தீனதயாள் உள்ளிட்டோர், கடந்த சில மாதங் களுக்கு முன் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
அப்போது, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தீனதயாளின் வீடு, கிடங்கு, அலுவலகத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான சுவாமி சிலைகள், ஓவியங்கள் கைப்பற்றப் பட்டன.
போலீஸாரிடம் தீனதயாள் அளித்த வாக்குமூலத்தில், தமிழ கம் முழுவதுமிருந்து தனக்கு சிலை களை திருடித் தருவோர் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதில், காரைக்குடி செக்காலை சண்முக ராஜா தெருவைச் சேர்ந்த கனகராஜ் (64), அழகப்பாபுரத்தைச் சேர்ந்த தினகரன் (69), சாமிநாதன் செட்டியார் தெருவைச் சேர்ந்த பெரியநாயகம் (47), எஸ்ஆர்எம் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (60) ஆகிய 4 பேரும் தனக்கு சிலைகளை திருடி தந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த 4 பேரையும் கைது செய்ய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் காரைக்குடியில் கடந்த ஒருவாரமாக முகாமிட்டிருந்தனர்.
இதனிடையே, 4 பேரும் சிவகங்கை தாலுகாவைச் சேர்ந்த விஏஒக்கள் கோபிகிருஷ்ணா, வெள்ளைச்சாமி, பெரோஸ்கான், கவுரி ஆகியோர் முன் நேற்று முன்தினம் சரணடைந்தனர்.
இதையடுத்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் இரவு 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 4 பேரும் போலீஸ் வாகனம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட கனகராஜ், தினகரன், பெரிய நாயகம், செல்வராஜ் ஆகிய 4 பேரையும் அடுத்த மாதம் 1-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் மகேஸ்வரி ரேகா பானு உத்தரவிட்டார். அதன்படி, 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.