3 தொகுதி தேர்தல்களில் தேமுதிக தனித்துப் போட்டி: கட்சி நிர்வாகி தகவல்

3 தொகுதி தேர்தல்களில் தேமுதிக தனித்துப் போட்டி: கட்சி நிர்வாகி தகவல்
Updated on
1 min read

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங் குன்றம் ஆகிய 3 தொகுதி களுக்கான தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்த லின்போது தஞ்சாவூர், அரவக் குறிச்சி தொகுதிகளில் பணப் பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடு கள் நடந்ததாகக் கூறி, அந்த தொகுதிகளுக்கு நடக்கவிருந்த தேர்தலை, தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது மேலும், திருப்பரங் குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்ததை அடுத்து, அந்த தொகுதியும் காலியாக உள்ளது.

இந்நிலையில், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 19-ம் தேதியன்று தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

திமுக சார்பில் போட்டியிட விரும்புவர்கள் வரும் 20-ம் தேதிக்குள் விருப்ப மனு அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, ம.ந.கூட்டணி, தமாகா அணியில் இருந்தது. அப்போது, தஞ்சை தொகுதியில் தேமுதிகவும், அரவக்குறிச்சியில் மதிமுகவும், திருப்பரங்குன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட்டன. தேர்தலில் தேமுதிக ம.ந.கூட்டணி- தமாகா அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து, ம.ந.கூட்டணி யில் இருந்து தேமுதிக, தமாகா விலகின. இந்த சூழலில், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேமுதிக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக தேமுதிக தேர்தல் பிரிவு நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தஞ்சை, அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, இது தொடர்பாக அந்தந்த தொகுதி களுக்கான பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி னார்.

இதன்பேரில், 3 தொகுதி களிலும் தனித்துப் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன்பேரில், ஓரிரு நாட்களில் முறைப்படி அறிவிப்பு வெளிவரும். தஞ்சைக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் தற்போது திமுகவில் உள்ளார். அதேபோல், மற்ற இரு இடங் களிலும் அப்போதைய கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. எனவே, 3 தொகுதிகளுக்கும் புதிதாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்’’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in