

சென்னை நீலாங்கரை அருகே கோயில் குளத்தில் குளிக்கும்போது நீரில் மூழ்கி 3 மாணவர்கள் நேற்று உயிரிழந்தனர்.
நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த வர்கள் ஹரிஹரன்(17), பி.விக் னேஷ்(17), ஜெ.விக்னேஷ்(17). மூவரும் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் வீட்டுக்கு அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படிக் கும் திருவான்மியூரைச் சேர்ந்த சேர்ந்த விஷ்ணுவரதன் (17), பொன்பாஸ்கர்ராஜ் (17) ஆகியோர் விடுமுறைக்காக வந்துள்ளனர்.
இவர்கள் 5 பேரும் நீலாங் கரைக்கு அருகே உள்ள ஈஞ்சம்பாக் கம் கவுரி அம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளனர். பின்னர் கோயில் குளத்தில் குளிப்ப தற்காக இறங்கியுள்ளனர். சிறிது நேரத்துக்குப் பிறகு குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்ட னர்.
இந்நிலையில் எதிர்பாராதவித மாக தண்ணீரில் மூழ்கத் தொடங்கி னர். இவர்களில் ஹரிஹரன், ஜெ.விக்னேஷுக்கு நீச்சல் தெரியும். மற்ற 3 பேருக்கும் நீச்சல் தெரி யாது. இதனால் நீரில் தத்தளித்த நண்பர்களை காப்பாற்ற இருவரும் முயன்றுள்ளனர். ஆனால் இவர் களையும் சேர்த்து உள்ளே இழுக்கவே காப்பாற்ற முடியாமல் இருவரும் வெளியில் வந்து கூச்சலிட்டுள்ளனர்.
இவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து நீரில் மூழ்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனாலும் முடிய வில்லை. இதனால் பி.விக்னேஷ், விஷ்ணுவரதன், பொன்பாஸ்கர் ராஜ் ஆகியோர் நீரில் மூழ்கி இறந்தனர்.
இதனைத் தொடர்ந்து சடலத்தை தேடும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீனவர்கள் தீவிரமாக தேடி 3 பேரின் சடலங்களை மீட்டனர். இதுகுறித்து நீலாங்கரை மற்றும் செம்மஞ்சேரி போலீஸார் வந்து விசாரணை நடத்தினர்.
மாணவர்கள் மூழ்கி இறந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பொது மக்கள் ஏராளமானோர் குளத் தின் அருகே திரண்டனர். இவர் களின் உறவினர்கள் சம்பவ இடத் தில் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.