

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன் துறை முகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டி ருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘கியான்ட்’ என பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளது. இது, அந்தமானுக்கு வடக்கே 620 கி.மீ., விசாகப்பட்டி னத்துக்கு கிழக்கே 850 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள் ளது.
இப்புயல் மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு நோக்கி நகரும். இருப்பினும் இப்புயல் கரையை கடக்காமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இப்புயலால் ஒடிசா, வடக்கு ஆந்திராவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தமிழகக் கடற்கரை நோக்கி நகரக்கூடும் என எதிர் பார்க்கப்படுவதால், அதுகுறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக நாகப்பட்டினம், பாம்பன், சென்னை, எண்ணூர், தூத்துக் குடி, புதுச்சேரி துறைமுகத்திலும், காரைக்கால் தனியார் துறைமுகத் திலும் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
“இப்புயலால் தமிழகத்துக்குப் பாதிப்பு ஏதும் இல்லை. மீனவர் கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண் டாம்” என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.