ஸ்மார்ட் சிட்டி ஊழல்: முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்

ஸ்மார்ட் சிட்டி ஊழல்: முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்

Published on

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார் இன்று தாக்கல் செய்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த மே மாதம் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில், ஒரு நபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நகரம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார் இன்று தாக்கல் செய்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in