

தீபாவளி பண்டிகையின்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்ய போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 2 ஆயிரம் ஆம்னி பேருந்துகளின் முழு விவரங்களும் சேரிக்கப்பட்டு மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பண்டிகை நாட்கள் அல்லது தொடர் விடுமுறையின்போது ஆம்னி பேருந்துகளில் 50 முதல் 60 சதவீதம் வரை அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, ஆட்டோக்களுக்கு நிர்ணயம் செய்துள்ளதுபோல, ஆம்னி பேருந்துகளுக்கும் தமிழக அரசே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து இணை ஆணையர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடந்தது. இதில் ஆம்னி பேருந்துக ளின் விதிமீறல்களை கட்டுப்படுத்து வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: விடு முறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நட வடிக்கை எடுத்து வருகிறோம். தீபாவளி பண்டிகையை முன் னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தி ஆன் லைன் மூலம் வசூலிக்கும் முறை தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து கண்காணித்து வருகி றோம். தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வரும் 2 ஆயிரம் ஆம்னி பேருந்துகளின் எண், உரிமையாளர் பெயர், புறப்படும் இடம், அந்தந்த பேருந்துகளின் நிறுத்தும் இடங்கள், கட்டணம் வசூலிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்துள்ளோம். இதை முழு அறிக்கையாக தயா ரித்து மொத்தமுள்ள 11 மண்ட லங்களுக்கும் அனுப்பியுள்ளோம்.
தீபாவளி பண்டிகையை யொட்டி, வட்டார போக்குவரத்து அலுவலர்களைக் (ஆர்டிஓக்கள்) கொண்ட சிறப்புக் குழுக்களை அமைத்து ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்க உள்ளோம். சென்னை, புறநகர் பகுதிகளில் மட்டும் 20 சிறப்புக் குழுக்கள் அமைத்து ஆய்வு நடத்தப்படும். கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர், செங்குன்றம், கிழக்கு கடற்கரை சாலை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் சிறப்புக் குழுக்கள் ஆய்வு நடத்தும்.
பயணிகளிடம் அதிக கட் டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து களைப் பறிமுதல் செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. பாதி வழியில் பயணிகளை இறக்கிவிடாமல், சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்ற டைந்த பிறகு பேருந்தைப் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் வலி யுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, அவசரகால கதவுகள், முதல் உதவி பெட்டி இல்லாதது, அரசுக்கு வரி செலுத்தாதது போன்ற விதிமுறை மீறல் இருந்தாலும் ஆம்னி பேருந்து உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.