Last Updated : 05 Oct, 2016 09:53 AM

 

Published : 05 Oct 2016 09:53 AM
Last Updated : 05 Oct 2016 09:53 AM

பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு வரவேற்பு: சிவகாசியில் ஏராளமான புதிய ரகங்கள் அறிமுகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு சிவகாசியில் தயாரிக் கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஐரோப்பிய நாடுகளின் பெயர்களிலும், சாக்லெட் பெயர்களிலும் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வழக்கமாக தீபாவளி, தசரா போன்ற பண்டிகைக் காலங்களில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திருமணம், கோயில் திருவிழா, கட்சி நிகழ்ச்சிகள், தேர்தல் வெற்றி என அனைத்து மகிழ்ச்சியான தருணங்களிலும் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். இதன் காரணமாக பட்டாசுத் தொழில் தற்போது முழு நேர தொழிலாக மேம்பட்டுள்ளது.

நாட்டின் பட்டாசு தேவையில் 90 சதவீதத்தை விருதுநகர் மாவட் டத்தின் சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செயல்படும் ஆலைகள் பூர்த்திசெய்கின்றன. இங்கு பட்டாசு உற்பத்திக்கான மூலப்பொருட்களான அலுமினியம் பாஸ்பேட், வெடி உப்பு எனப்படும் பொட்டாஷியம் நைட்ரேட், பச்சை உப்பு எனப்படும் பேரியம் நைட்ரேட், சிவப்பு உப்பு எனப்படும் ஸ்ட்ராங்ஷியம் நைட்ரேட், அலு மினிய கம்பி, ஸ்பார்க்லர் போன் றவை குறிப்பிட்ட சதவிகிதத்தில் கலந்து பலவிதமான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த ரசாயனங்களைப் பயன் படுத்தியே சப்தம் ஏற்படுத்தும் பட் டாசுகள், ஒளி உண்டாக்கும் பட்டாசு கள், இவையிரண்டும் இணைந்த வகை பட்டாசுகள் என 3 வகை யான பட்டாசுகள் உற்பத்தி செய்யப் படுகின்றன. இந்த 3 வகையில் இருந்தும் 250 முதல் 300 ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.

மக்களிடம் பேன்ஸி ரக பட்டாசுளுக்கு வரவேற்பு உள்ளதால், தற்போது சிவகாசி பட்டாசு ஆலைகளில் இவ்வகை பட்டாசு கள் கூடுதலாக தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகி றது. குறிப்பாக விசில் போன்ற ஒலியெழுப்பும் பட்டாசு வகை களும், உயரத்தில் சென்று வெடிக் கும்போது பல வண்ணங்களை உமிழ்ந்தபடி வெடித்துச் சிதறும் ‘மணி மருந்து’ வைக்கப்பட்ட பட்டாசு வகைகள் தற்போது அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையொன்றில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்க குழாய்களில் மணி மருந்து செலுத்தும் பெண்.

புதிய ரகங்கள்

இதுகுறித்து சிவகாசியில் உள்ள பிரபல பட்டாசு விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கணேசன் கூறும்போது, “சமீப காலங்களாக மிகுந்த சப்தத்துடன் வெடிக்கும் பட்டாசு ரகங்களைவிட பேன்ஸி ரக பட்டாசுகளுக்கே அதிக வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தையும் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய ரக பட்டாசுகளை தயாரிக்கிறோம். இந்த ஆண்டு பேன்ஸி ரக பட்டாசுகளில் 100 மீட்டர் முதல் 300 மீட்டர் உயரம் வரை சென்று வெடிக்கும் ரெட் டிராகன், கோல்டன் வெப், புளு ஆக்டோபஸ், ஸ்கை டிராபிக், வேல்டுவார் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

நார்வே, ஜெர்மன், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளின் பெயர்களிலும், ஜெம்பார்க், ஜெம்ஸ் போன்ற சாக்லெட் பெயர்களிலும் பேன்ஸி ரக பட்டாசுகள் வந்துள் ளன. அதோடு, 12 முதல் 240 ஷாட் பேன்ஸி ரக பட்டாசுகளும் வந்துள்ளன. இவை ரூ.200 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதோடு, 50 ஆயிரம் வாலா, 20 ஆயிரம் வாலா, 10 ஆயிரம் வாலா போன்ற சரவெடிகளும் ஆர்டரின்பேரில் தயா ரித்து கொடுக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x