Published : 01 Oct 2016 08:44 AM
Last Updated : 01 Oct 2016 08:44 AM

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் புகைப்படத்தை வெளியிடக் கோருவது சரியல்ல: காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து

‘‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா வின் புகைப்படத்தை வெளியிடு மாறு கோருவது சரியல்ல’’ என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமாகா மாநில துணைத் தலை வரும், முன்னாள் எம்.பி.யுமான தேவதாஸ் உள்ளிட்டோர் அக்கட்சி யிலிருந்து விலகி நேற்று காங்கிரஸில் இணைந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தலில் காங் கிரஸுக்கான இடங்களை முடிவு செய்ய திமுக மாவட்டச் செயலாளர் களுடன் காங்கிரஸ் மாவட்டத் தலை வர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். பேச்சு திருப்திகரமாக உள்ளது. தொடர்ந்து பேசி வருகிறோம். சென்னை மாநகராட்சியில் 14 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

பல இடங்களில் கிராம ஊராட்சித் தலைவர் பதவிகள் ஏல முறையில் தேர்வு செய்யப்படுவதாக செய்தி கள் வருகின்றன. இது ஜனநாயகத் துக்கு விரோதமானது. இதுபோல ஏலம் விடப்படுவதை தேர்தல் ஆணையம் கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா முழுமை யாக குணமடைந்து வழக்கமான பணிகளைத் தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர் பெண் ணாக இருப்பதால் அவர் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட வேண்டியதில்லை. அவ்வாறு வெளியிடக்கோருவது சரியானதும் அல்ல. அவ்வளவு தூரம் ஆராய்ச்சிகள் தேவையில்லை.

அப்போலோ மருத்துவமனை சார்பில் அவரது உடல்நிலை குறித்து அறிக்கைகள் வெளியிடப்பட்டுள் ளன. முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேவையான அனைத்து சிகிச்சை களும் கிடைக்க தலைமைச் செய லாளர் ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மத்திய அரசும் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

சீமான் வலியுறுத்தல்

“முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. தேர் தலின்போதும், சென்னை வெள்ள பாதிப்பின்போதும் முதல்வர் உரை வாட்ஸ்அப் மூலம் பொதுமக் களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதே போல உடல்நலம் குறித்து முதல்வரே தெரிவிக்கலாம். முதல்வரின் உடல் நலம் குறித்து தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x