Published : 18 Oct 2016 08:43 AM
Last Updated : 18 Oct 2016 08:43 AM

ராகுல் காந்தியுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு: தமிழக அரசியல், திமுக கூட்டணி நிலவரம் குறித்து ஆலோசனை

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அக்கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜி னாமா செய்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 14-ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார்.

தலைவராகப் பொறுப்பேற்றது முதல் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். சட்டப்பேரவைத் தேர்த லில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்ததாக 6 மாவட்டத் தலைவர்களை நீக்கி விட்டு புதியவர்களை இளங் கோவன் நியமித்தார். ஆனால், தலைவரான 12-வது நாளில் இளங்கோவனால் நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களை நீக்கி விட்டு ஏற்கனவே தலைவராக இருந்தவர்களே பதவியில் தொடர் வார்கள் என திருநாவுக்கரசர் அறிவித்தார்.

இதனால் இளங்கோவன் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் காங் கிரஸுக்கு மிகக்குறைந்த இடங் களையே திமுக ஒதுக்கியது. இத னால் அதிருப்தியடைந்த திரு நாவுக்கரசர் திமுகவுக்கு எதிராக காய் நகர்த்தத் தொடங்கினார்.

‘முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் படங்களை வெளியிட வேண்டும்’ என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விட, ‘அப்படி கேட்பது சரியல்ல’ என்றார் திருநாவுக்கரசர். ‘முதல்வர் மருத்துவமனையில் இருப்பதால் பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும்’ என ஸ்டாலின் கேட்க, அதற்கு அவசியம் இல்லை’ என் றார் திருநாவுக்கரசர். திமுக - காங் கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள தையே இந்த நிகழ்வுகள் காட்டுவதாக இருகட்சியினரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு டெல்லி சென்ற திருநாவுக்கரசர் நேற்று காலை 11 மணிக்கு ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி, இளங்கோவன் ஆதரவாளர்களின் ஒத்துழைப்பு இல்லாதது, முதல்வர் ஜெய லலிதா மருத்துவமனையில் இருப் பதால் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை ஆகியவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

திமுகவுடன் கூட்டணி என்றா லும் காங்கிரஸின் தனித்தன் மையை விட்டுக் கொடுக்காமல் செயல்பட வேண்டும். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் வகையில் கூட்டணியை உருவாக்க வேண்டும் என ராகுல் அறிவுறுத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ராகுல் காந்தி உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப்பேசினேன். தமிழக அரசி யல் நிலவரம், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசித்தோம். தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை.

காங்கிரஸ் தலைவரான பிறகு பல்வேறு கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறேன். அந்த அடிப்படையி லேயே தேமுதிக தலைவர் விஜய காந்தையும் சந்தித்தேன். தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது குறித்து விஜயகாந்திடம் எதுவும் பேசவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x