

சென்னை: உலக புகைப்பட தினத்தையொட்டி ‘75-வது சுதந்திர தினம்' எனும் தலைப்பிலான புகைப்பட போட்டியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தியது.
இதில் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்களது புகைப்படங்களை அனுப்பி வைத்தனர். அவர்களில் வெற்றிபெற்றவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இப்போட்டியில் கோவையைச் சேர்ந்த சுரேஷ்குமார் முதல் பரிசையும், சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.அனீஷ் இரண்டாம் பரிசையும், கோவை பீளமேடைச் சேர்ந்த எஸ்.சக்தி நிமலேஷ் மூன்றாம் பரிசையும் வென்றுள்ளனர்.
இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ‘வெற்றிக்கொடி’ நாளிதழின் ஒரு மாத இலவச சந்தா மற்றும் இ-சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
கோவையின் புகழ்பெற்ற புகைப்பட நிபுணர் டி.ஏ.நடராஜன் இப்போட்டியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பரிசுக்குரிய புகைப்படங்களைத் தேர்வுசெய்தார்.
இப்போட்டியில் வெற்றிபெற்ற புகைப்படங்களை https://www.htamil.org/00101, https://www.htamil.org/00106 என்ற லிங்க்-களில் காணலாம்.