Published : 04 Oct 2016 09:07 AM
Last Updated : 04 Oct 2016 09:07 AM

50 ஆண்டுகளில் பரங்கிமலை ஒன்றியத் தலைவர் பதவி முதன்முறையாக பெண்களுக்கு ஒதுக்கீடு

பரங்கிமலை ஒன்றியத் தலைவர் பதவி 50 ஆண்டுகளில் முதல்முறை யாக பெண்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

பரங்கிலை ஒன்றியத்தில் 56 கிராம ஊராட்சிகள் இருந்தன. இதன்படி, பெருங்களத்தூர் தொடங்கி கோடம்பாக்கம் வரை யும், அடையாறு முதல் உத் தண்டி, செம்மஞ்சேரி வரையிலும் எல்லைகள் இருந்தன. இதில் பெரும் பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப் பட்டுவிட்டதால் தற்போது 15 ஊராட்சிகளே எஞ்சி உள்ளன.

கடந்த 1961-ம் ஆண்டு கிராம ராஜ்ஜியம் என்ற முறையில் ஊராட்சி தலைவர்கள் சேர்ந்து அக்கிராசனார் என்று அழைக்கப்பட்ட ஒன்றியத் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். ஒன்றியத் தலைவர்கள் சேர்ந்து, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரை தேர்வு செய்வர்.

இந்நிலையில் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, பொதுமக்களே ஒன்றிய கவுன்சிலரை தேர்வு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. இதனால் ஒன்றிய கவுன்சிலர்கள் சேர்ந்து ஒன்றிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறை வந்தது என்கிறார் ஒய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி.

இத்தகைய பாரம்பரியம் கொண்ட பரங்கிமலை ஒன்றிய தலைவர் பதவி கடந்த 1961-ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை 50 ஆண்டுகளாக பொதுப் பிரிவில் இருந்து வந்தது. இந்த பதவி ஒதுக்கீடு முறையில் மாற்றம் வரும் என ஒவ்வொரு உள்ளாட்சித் தேர்தலின் போதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த மாற்றமும் வரவில்லை.

தற்போது தமிழக உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் ஒன்றிய தலைவர் பதவி ஒதுக்கீட்டில் மாற்றம் வராது என அனைத்து கட்சியினரும் கூறி வந்தனர். இருப்பினும் எதற்கும் இருக்கட்டுமே என நினைத்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் தங்களது பெயரி லும் தங்களது மனைவி பெயரிலும் விருப்ப மனுக்களை கொடுத்திருந் தனர். இந்நிலையில் பரங்கிமலை ஒன்றிய தலைவர் பதவி பெண்க ளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2.40 லட்சம் பேர்

பரங்கிமலை ஊராட்சி ஒன்றி யத்தில் மொத்தம்11 வார்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 1,20,573 பேர். பெண் வாக்காளர்கள், 1,18,972 பேர் உள்ளனர். மூன்றாவது பாலினத்தவர் 18 பேர் உட்பட மொத்தம் 2,39, 563 வாக்காளர்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x