

அரசுத் திட்டங்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும், பருவமழை பாதுகாப்பு தொடர்பான பணிகளை ஆய்வு செய்யவும் சிறப்பு அதிகாரிகளாக, மாவட்டம் தோறும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இவற் றுக்கான நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் இதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந் தனர். ஆனால் புதிய ஆட்சி பொறுப் பேற்று இதுவரை சிறப்பு கண் காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப் படாமல் இருந்தனர். இந்நிலையில், மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து கடந்த 15-ம் தேதி தமிழக தலைமைச் செயலர் ராமமோகன ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, அரியலூர், பெரம்ப லூர்- கே.பனீந்திர ரெட்டி (நகராட்சி நிர்வாகம்), கோவை, நீலகிரி- ஹர்மேந்தர் சிங் (கைத்தறி), கடலூர்- ககன்தீப் சிங் பேடி (வேளாண்மை), தருமபுரி- ஜெ.ராதாகிருஷ்ணன் (சுகாதாரம்), திண்டுக்கல்- மங்கத் ராம் சர்மா (சிறு குறு தொழில்), ஈரோடு- சி.சந்திரமவுலி( வணிகவரித் துறை), காஞ்சிபுரம்- பி.அமுதா (தொழிலாளர் நலம்), கன்னியா குமரி- டி.கே.ராமச்சந்திரன்( தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் கண்காணிப்பார்கள்.
மேலும் கரூர், திருச்சி- ராஜிவ் ரஞ்சன்( நெடுஞ்சாலை), கிருஷ்ண கிரி- ஹன்ஸ் ராஜ் வர்மா (ஊரக வளர்ச்சி), மதுரை- தர்மேந்திர பிரதாப் யாதவ் (வீட்டு வசதி), புதுக்கோட்டை- பி.அண்ணாமலை ( ஆதிதிராவிடர் நலம்), தஞ்சை- பிரதீப் யாதவ்(உணவுத் துறை), நாமக் கல், சேலம்- நசிமுத்தீன் (மாற்றுத் திறனாளிகள் நலன்), விருதுநகர், தூத்துக்குடி- எஸ்.கிருஷ்ணன் (திட்டம் மற்றும் வளர்ச்சி), நாகை- பி.சந்திரமோகன்(வருவாய்), ராமநாதபுரம்- சந்திரகாந்த் பி காம்ப்ளே (போக்குவரத்து), சிவ கங்கை- ஆர்.வெங்கடேசன் (தமிழ் வளர்ச்சி), திருவாரூர்- கே.மணி வாசன் (சமூக நலம்) ஆகியோர் கண்காணிக்கின்றனர்.
இவர்கள் தவிர, தேனி- ஏ.கார்த் திக் (பிற்படுத்தப்பட்டோர் நலம்), திருவண்ணாமலை- எஸ்.ஸ்வர்ணா (பணியாளர் நலன்), நெல்லை- ராஜேந்திரகுமார் (விளையாட்டு), திருப்பூர்- பி.செந்தில்குமார்(நிதி-செலவினம்), திருவள்ளூர்- எஸ்.கே.பிரபாகர்(பொதுப்பணி), வேலூர்- டி.சபிதா(பள்ளிக்கல்வி), விழுப்புரம்- அதுல்ய மிஸ்ரா (வனத்துறை) செயலர்கள் அரசு திட்டங்களை கண்காணிக்க நிய மிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப் பட்ட மாவட்டங்களில் மாதந்தோறும் 6 மற்றும் 15-ம் தேதிகளில் ஆய்வு மேற்கொண்டு, திட்டங்கள் தொடர் பான அறிக்கையை 20-ம் தேதி தலைமைச் செயலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் பாதிப்பை கருத் தில் கொண்டு, இந்தாண்டு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இதன்படி, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சி யர்களுடன் இணைந்து, வெள்ள தடுப்பு மற்றும் துயர் துடைப்பு பணி களை மேற்கொள்ள ஐஏஎஸ் அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, தேனி, திருவாரூர், நெல்லை, வேலூர், விழுப்புரம் மாவட்டங் களுக்கு அரசு திட்டங்கள் கண் காணிப்பு அதிகாரிகளே வெள்ளத் தடுப்பு பணிக்கும் நியமிக்கப்பட் டுள்ளனர். நாகை மாவட்டத்துக்கு ஏ.ஞானசேகரன் (கூட்டுறவு பதிவாளர்),தூத்துக்குடிக்கு ஷம்பு கலோலிகர் (குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குனர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர மாநக ராட்சி பகுதிகளுக்கு, நகராட்சி நிர்வா கத்துறை செயலர் கே.பனீந்திர ரெட்டி தலைமையில், 15 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்துக்கு, தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் கே.ராஜாராமன் தலைமையி்ல், தொழிலாளர் நலத்துறை செயலர் பி.அமுதா, வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் என்.சுப்பையன், ஆதிதிராவிடர் நல இயக்குநர் சிவசண்முகராஜா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்துக்கு, நில அளவைத்துறை ஆணையர் யத் தீந்திரநாத் ஸ்வைன் தலைமையில், தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மேலாண் இயக்குநர் அபூர்வா, போக்குவரத்து ஆணையர் சத்திய பிரதா சாகு, சமூக நல இயக்குநர் வி.அமுதவல்லி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பருவமழை நெருங்கி வருவதால் இக்குழுவினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணை யர் சத்தியகோபால் ஆகியோருடன் இணைந்து பல்வேறு திட்டங்கள் தயா ரித்து, வெள்ள தடுப்பு, மீட்பு பணிக் கான ஆயத்தப்பணிகளை தொடங்கி விட்டனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று, அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்துள்ளது.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் மாதந்தோறும் 6 மற்றும் 15-ம் தேதிகளில் ஆய்வு மேற்கொண்டு, திட்டங்கள் தொடர்பான அறிக்கையை 20-ம் தேதி தலைமைச் செயலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.