

நாமக்கல் அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப மாக உயிரிழந்தனர்.
நாமக்கல் கொண்டிசெட்டிப் பட்டி கணபதி நகரைச் சேர்ந்தவர் ஏ.சி.மெக்கானிக் முருகன் (38). அவர் நேற்று மாலை தனது சொந்த ஊரான கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்துக்கு இரு சக்கர வாகனத்தில் மனைவி தங்கமணி (30), மகள் பூர்வி (4), மகன் சதீஸ் (2) ஆகியோருடன் சென்றுள் ளார். நாமக்கல் -மோகனூர் சாலை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அருகே சென்றபோது, எதிரே மோகனூரில் இருந்து வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் முருகன், அவரது மனைவி தங்கமணி, குழந்தைகள் பூர்வி, சதீஸ் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.