Published : 17 Oct 2016 09:53 am

Updated : 17 Oct 2016 09:53 am

 

Published : 17 Oct 2016 09:53 AM
Last Updated : 17 Oct 2016 09:53 AM

மரம் வளர்ப்பில் நூதன விழிப்புணர்வு: அரசு ஊழியரின் அசராத பணி

கோவை வ.உ.சி. பூங்கா முன்பு இளம்பச்சை நிற காடாத் துணியை உடையாக அணிந்தவர், பூங்காவுக்கு வந்து செல்லும் பொதுமக்களிடம், உடையில் வைத்துள்ள ஏராளமான மரக்கன்றுகளில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து இலவசமாக வழங்குகிறார். ‘மரங் களை வளருங்கள். கருவேல மரங்களை அழியுங்கள். குழந் தைகள் பூமியில் நலமுடன் வாழ, பூமியைப் பசுமையாக்குவோம்’ என்ற விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் தாங்கியபடி, நிற்கிறார் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றும் செல்வகுமார்(36).

மரங்கள் வளர்ப்பின் அவசியம் குறித்து, கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் செல்வகுமார் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் காங்கயம் எனது சொந்த ஊர். எனது தந்தை தங்கராஜ் மரம் வளர்ப்பு தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கும் நிரந்தர வருவாயில் வேலை இல்லை.


இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்தேன். அன்றுமுதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊர் ஊராகச் சென்று மரம் வளர்ப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகி றேன்.

மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகி றார். அவரும் எனக்கு ஊக்கம் தருவதால் எவ்வித இடையூறும் இன்றி, விழிப்புணர்வு பணியைத் செம்மையாக செய்ய முடிகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில், மரக்கன்றுகளை மட்டும் கொண்டு சென்று கொடுத்து வந்தேன். ஆனால், மரம் வளர்ப்பு தொடர் பான விழிப்புணர்வு பலரையும் சென்றடையவில்லை.

உடல் முழுவதும் மரக்கன்று களை வைக்கலாம் என யோசித்து, அதற்காக பிரத்யேக உடை தயாரித்தேன். அதன்பின், பேருந்து நிலையம், திரையரங்க வாசல்கள், முக்கிய சாலை சந்திப்பு கள், பூங்காங்கள் ஆகிய இடங் களுக்கு மரக்கன்று உடையை அணிந்துகொண்டு, வாரந்தோறும் செல்லத் தொடங்கினேன். அப் போது பலரும் கவனிக்கத் தொடங் கினர். விழிப்புணர்வு பணியும் எளி மையாக இருந்தது.

மரக்கன்றுகள் வைத்து உடையை அணிந்துவிட்டால் நாள் முழுவதும் அதன் எடையை தாங்கி நிற்க வேண்டும். ஆடையில் 70 மரக்கன்றுகள் வைத்திருப்பேன். பொதுமக்கள் கேட்க கேட்க அவர் களுக்கு இலவசமாக மரக்கன்று களை வழங்குவேன். இதுவரை ஆயிரக்கணக்கான மரக்கன்று களை வழங்கி உள்ளேன்.

இன்னமும் தொடர்ச்சியாக வழங்குவேன். இதற்காக மாதந்தோறும் வாங்கும் சம்பளத் தில் மூன்றில் ஒருபகுதியைச் செலவிடுகிறேன். மரக்கன்றுகள் வழங்கும் தினத்தன்று உதவியாளர் ஒருவரை வைத்துக்கொள்வேன்.

பலரும் தங்களுக்கு விருப்பப் பட்ட மரக்கன்றுகளை என்னிடம் கேட்டு பெறுவார்கள். ‘ஒவ்வொரு விதையும் இந்த மண்ணில் முக்கியம்’ என பொதுமக்களிடம் வழங்கும்போது தொடர்ச்சியாக சொல்வேன். அதை அவர்களும் ஆமோதித்தபடி, என் தொடர்பு எண்ணைப் பெற்று, மரம் வளரும் விதம் குறித்து சிலாகித்து சொல்லும் நண்பர்களும் உண்டு. அப்போது மனம் மிகவும் மகிழ்ச்சியடையும்.

அதேபோல் விவசாயக் கண் காட்சிகள் எங்கு நடந்தாலும், அரி தான மரக்கன்றுகளை ஆடை யில் அணிந்துகொண்டு சென்று விடுவேன். அங்கு பலரும் ஆர்வத் துடன் கேட்டு வாங்கிச் செல்வார் கள். இவை தவிர தீபாவளி பண் டிகையின்போது வெடி வெடிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறேன். பறவை மற்றும் விலங்கினங்களும் நாம் வாழும் சுற்றுச்சூழலின் பிரதான அங்கம் என்பதை தொடர்ச்சியாக விளக்கி வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை வ.உ.சி. பூங்கா முன்பு செல்வகுமாரிடம் இருந்து மரக்கன்றுகளைப் பெறும் இளைஞர் கள் சிலர், எங்கள் ஊருக்கு வரும்போது தொடர்புகொள்ளுங் கள், நாங்களும் விழிப்புணர்வு பணியால் எங்களால் முடிந்த உதவியை உங்களுக்கு செய்கி றோம் என்று சொல்லும்போது சந்தோஷமாக சிரிக்கிறார் செல்வகுமார்.மரம் வளர்ப்புவிழிப்புணர்வு பிரச்சாரம்இலவச மரக்கன்றுகள்ஆட்சியர் அலுவலகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x