கிரானைட் முறைகேடு வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் 758 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கிரானைட் முறைகேடு வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் 758 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
Updated on
1 min read

ரூ.16.37 கோடி கிரானைட் முறை கேடு வழக்குகளில் 758 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை போலீஸார் மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக 98 வழக்கு களை போலீஸார் பதிவு செய்தனர். கிரானைட் கற்களை வெட்டி அனு மதி பெறாத இடங்களில் அடுக்கி வைத்ததாக ஆட்சியர் அளித்த புகாரின்பேரில் 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போலீ ஸார் தொடர்ந்ததில் 45 வழக்கு களில் ஏற்கெனவே குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நேற்று மேலும் 3 வழக்குகளில் 758 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷீலா, காவல் ஆய்வாளர்கள் பிரகாஷ், ராஜாசிங் ஆகியோர் மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில் இடையபட்டி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் அரசுக்கு ரூ.15.56 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குமார் கிரானைட் நிர்வாகிகள் பெரியகருப்பன், பாலகிருஷ்ணன், அருண் மற்றும் 30 பேர் மீது 551 பக்கங்கள், கீழவளவு பகுதியில் கட்டழகன் கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.76 லட்சம் இழப்பீடு செய்ததாக சைலஜ ரெட்டி மீது தொடரப்பட்ட வழக் கில் 170 பக்கங்கள், தெற்கு அமூர் பகுதிகளில் அரசுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு ஏற்படுத்தியதாக பிஆர்பி நிறுவனம் உட்பட 20 பேர் மீது 37 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டன.

ஆட்சியர் தொடர்ந்த 40 வழக்கு கள் மீதான விசாரணை நேற்று வந்தது. இவ்வழக்குகளை நவம் பர் 11-ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் செல்வகுமார் தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in