

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப் பரங்குன்றம் தொகுதிகளின் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 7 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மூன்று தொகுதிகளுக் கும் நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக் கான அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டதுடன், வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கியது.
நேற்று மாலை 5 மணி வரை அரவக்குறிச்சியில், இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் ஒரு சுயேட்சை என 3 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
அதே போல், தஞ்சை தொகுதியில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், திருப்பரங்குன்றம் தொகுதியில், தேர்தல் மன்னன் பத்ம ராஜன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் இருவர் என 3 பேரும் மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.
நேற்று மாலை முடிவில் மூன்று தொகுதிகளிலும் 7 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.