புகழஞ்சலி - நெல்லை கண்ணன் | ''துணிவுடன் மேடையில் பேசும் ஆற்றல் மிக்கவர்'' - கி.வீரமணி

புகழஞ்சலி - நெல்லை கண்ணன் | ''துணிவுடன் மேடையில் பேசும் ஆற்றல் மிக்கவர்'' - கி.வீரமணி
Updated on
1 min read

சென்னை: நெல்லை கண்ணன் மறைவினால் தமிழகம் ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வாளரை இழந்தது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சிறந்த தமிழ் அறிஞரும், சமூகப் பார்வையுடன் கூடிய முற்போக்கு சிந்தனையாளரும், சிறந்த இலக்கியப் பேச்சாளரும், துணிவுடன் எந்த மேடையிலும் பேசும் ஆற்றல் கொண்டவருமான நண்பர் நெல்லை கண்ணன் வயது முதிர்வு காரணமாக நெல்லையில் இன்று (18.8.2022) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

தமிழகம் ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வாளரை இழந்தது. அவரது இடத்தை எவரும் எளிதில் நிரப்ப இயலாது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in