துப்பாக்கி உரிமம் பெறுவதை உரிமையாக கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

துப்பாக்கி உரிமம் பெறுவதை உரிமையாக கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

துப்பாக்கி உரிமம் பெறுவதை உரிமையாகக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நெல்லையைச் சேர்ந்த மனோகரன் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் கடந்த 2006-ல்துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பல ஹெக்டேரில் விவசாயம் செய்து வருகிறார். நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இதனால் துப்பாக்கி உரிமம் கோரியுள்ளார்.

ஆனால் நெல்லை மாவட்டம்சமூகப் பதற்றமான பகுதி என்பதால் துப்பாக்கி உரிமம் மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு துப்பாக்கி வைத்தே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை. மேலும், துப்பாக்கி உரிமத்தை ஒரு உரிமையாகக் கோர முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in