

‘இந்தியா அனைவருக்குமான நாடு’ என்ற கோட்பாட்டை விளக்கி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்குகிறார்.
காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்கிறார். சுமார் 148 நாட்களில் 3,700 கிலோ மீட்டர் தூரம் கடக்க திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்கரை சாலையில் செப்டம்பர் 7-ம் தேதி பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது.
இதுதொடர்பாக அக்கட்சியினர் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ராகுல் பாதயாத்திரையைத் தொடர்ந்து அவர் பயணம் செய்யும் இடங்கள், பேசவுள்ள மைதானங்களை தயார் செய்யும் பணியில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். முளகுமூடு புனித அலோசியஸ் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தை சீரமைத்து தயார்படுத்தும் பணி நடைபெறுகிறது.
இப்பணியை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், பிரின்ஸ் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இதைப்போல் ராகுல் காந்தியுடன் நடைபயணம் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களின் பெயர் விவரங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது.