வழிதவறி வந்த இலங்கை மீனவர்கள் கைது

வழிதவறி வந்த இலங்கை மீனவர்கள் கைது
Updated on
1 min read

இலங்கையில் உள்ள வவுனியா மாவட்டம், கட்டிகுளத்தைச் சேர்ந்த வர்கள் தேவேநேசன்(26), அருள் நேசன்(25). இவர்களது தங்கையின் கணவர் விஜி(25). இந்த 3 பேரும் தலைமன்னாரில் இருந்து மீன் பிடிக்க ஒரு படகில் நேற்று முன்தினம் காலை சென்றனர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு கரை திரும்பும்போது, தலைமன் னார் செல்வதற்குப் பதிலாக தனுஷ்கோடி கடல் பகுதிக்கு வந்து விட்டனர். அங்கு ராமேசுவரம் படகுகள் மீன் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு, வழி தவறி வந்ததை அறிந்த அவர்கள், இலங்கைக்கு திரும்பிச் செல்ல முயன்றனர். அப்போது படகில் எரிபொருள் தீர்ந்ததால், தனுஷ் கோடி அருகே ஒன்றாம் தீடையில் கரை ஒதுங்கினர்.

அப்பகுதியில் தமிழக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் நேற்று காலை ரோந்து சென்றனர். அவர்கள் 3 மீனவர்களை பிடித்து மண்டபம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதைய டுத்து கடலோர பாதுகாப்புக் குழும மண்டபம் உதவி ஆய்வா ளர் ஜோதிபாசு, இலங்கை தமிழ் மீனவர்கள் 3 பேரையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கைது செய்து ராமநாதபுரம் நீதித் துறை நடுவர் எண்.1 நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினார்.

இவர்களை நவம்பர் 5 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து அவர் களை போலீஸார் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in