நெல்லை | பெண் தவறவிட்ட 43 பவுன் நகை ஒப்படைப்பு - ரயில்வே போலீஸாருக்கு பாராட்டு

நெல்லை | பெண் தவறவிட்ட 43 பவுன் நகை ஒப்படைப்பு - ரயில்வே போலீஸாருக்கு பாராட்டு
Updated on
1 min read

சென்னை மேடவாக்கம் காமராஜர் தெருவைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகன் ஹக்கீம் (34). இவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் இரவில் புறப்பட்டு நேற்று காலை திருநெல்வேலி சந்திப்புக்கு வந்தார்.

ரயில் பெட்டிகளில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றபின், ஒவ்வொரு பெட்டியாக திருநெல் வேலி ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிகுமார், தலைமை காவலர் ராதா, காவலர் சுப்பிரமணியன் ஆகியோர் சோதனை நடத்தினர்.

அப்போது எஸ் 4-வது பெட்டியில் 19-வது இருக்கையில் ஒரு பை இருந்ததை எடுத்தனர். டிக்கெட் விவரப் பட்டியலை வைத்து விசாரித்தபோது, அந்த பெட்டியில் 19, 21, 22 ஆகிய இருக்கைகளில் ஹக்கீம், அவரது தாய், தங்கை ஆகியோர் பயணம் செய்தது தெரியவந்தது. இதனிடையே, ரயில் நிலையத்தில் இருந்து வெளியே சென்ற ஹக்கீமின் தங்கை தனது கைப்பை காணாமல் போனதை உணர்ந்தார்.

அவர்கள் ரயில் நிலைய போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். 43 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1,500 ரொக்கத்துடன் கைப்பை காணாமல் போனதாக புகார் தெரிவி்த்தனர்.

அவர்களிடம் ஆய்வாளர் செல்வி விசாரணை நடத்தினார். பின்னர் நகை மற்றும் பணத்துடன் கைப்பையை ஹக்கீமின் தங்கையிடும் ஒப்படைத்தார். ரயில்வே போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in